வலைவாசல்:தொழினுட்பம்


தொகு  

தொழினுட்ப வலைவாசல்

தொழினுட்பம் என்பது, கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். தொழில்நுட்பம்; பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆளுவதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக, கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.

தொழினுட்பம் குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை

தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இக்கருவி மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகிறது. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.

தொழில்நுட்ப பகுப்புகள்உங்களுக்குத் தெரியுமா?
  • நிகழ்பட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக இயக்குபிடி பயன்படுத்தப்படுகின்றது. இவை பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அழுத்தும்-பொத்தான்களை கொண்டுள்ளன. மற்றும் இதன் இயக்க நிலையை கணினி மூலம் படிக்கப்பட இயலும்.
  • உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
  • முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
  • வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது.


நீங்களும் பங்களிக்கலாம்
  • தொழினுட்பம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • தொழினுட்பம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • தொழினுட்பம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • தொழினுட்பம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • தொழினுட்பம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.


தொகு  

சிறப்புப் படம்


தொங்கு பாலத்தில் பாலம் (பளு-தாங்கும் பகுதி) இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும், மேலும் பக்கவாட்டு கம்பிகளில் இருந்து செங்குத்து இடைநிறுத்த கம்பிகள் இணைக்கப்பட்டு அவை போக்குவரத்து செல்லும் சாலை உள்ள தளத்தின் எடையை தாங்கும்படி அமைக்கப்படுகின்றது.

Dieser Artikel basiert auf dem Artikel வலைவாசல்:தொழினுட்பம் aus der freien Enzyklopädie Wikipedia und steht unter der Doppellizenz GNU-Lizenz für freie Dokumentation und Creative Commons CC-BY-SA 3.0 Unported (Kurzfassung). In der Wikipedia ist eine Liste der Autoren verfügbar.