வலைவாசல்:புவியியல்


புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.

1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு.

2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது.

3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு.

4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு.

ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தொகு  

சிறப்புக் கட்டுரை

இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இப்பகுதி உலக வாழ் உயிரினங்கள் பலவற்றிலும் தனிச் சிறப்பு மிக்க இனங்கள் ஏராளமாக வாழும் இடமாகும். இக்காடுகள் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்க மிக்க குளிர்ச்சியானவையாகும். இதன் காரணமாக, இக்காடுகளில் மேகக் காடுகள் உருவாவதற்குத் தேவையான சூழற் தகைமை காணப்படுகிறது. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் தனிச் சிறப்பான முள்ளந்தண்டுளிகள், இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இக்காடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. அவ்வாறே, ஏராளமான ஓர்க்கிட், பாசி, பன்னத் தாவரங்களும் இக்காடுகளில் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. இக்காடுகளில் மரங்கள் 10-15மீ உயரம் வளர்கின்றன. இவை இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் மரங்களைவிட உயரம் மிகக் குறைவானவையாகும். மேலும், இவ்வுயர் நிலக் காடுகள் இலங்கையின் முக்கிய ஆறுகள் பலவற்றிற்கும் நீர்தாங்கு பகுதிகளாகக் காணப்படுகின்றன.


தொகு  

சிறப்புப் படம்

படிம உதவி: PlaneMad

தமிழ்நாட்டுப் புறத்திலிருந்து அகத்தியமலையின் பரந்த தோற்றம். இம்மலைமுடி மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் உயரம் 1,868 மீட்டர்கள். நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதியான இது, தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலையின் கேரளப்பக்கப் பகுதிகள் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மூலம் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகப் பக்கத்தில் மழைக்காற்று வருவதை இம்மலை தடுத்து விடுவதால், மழை மறைவுப் பகுதி ஒன்று உருவாகி, வறண்டு காட்சி அளிக்கிறது.

தொகு  

செய்திகளில் புவியியல்

தொகு  

புவியியலாளர்கள்‎

தொலெமி (கி.பி 90 - 168) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெமாயெஸ், ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். ரோமரின் கீழிருந்த எகிப்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும். தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய அறிவியல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய அல்மாகெஸ்ட் (Almagest) என்பதாகும். அடுத்தது, ஜியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, கிரேக்கர்களும், ரோமர்களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். நான்கு நூல்கள் என்ற பொருள் தரும் டெட்ராபிப்லோஸ் என்பதே நூலின் பெயர்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...

  • ... பனாமா கால்வாய் அமைக்கும் பணியில் மொத்தமாக 27,500 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ... இந்தியாவில் இயக்கத்திலுள்ள ஒரே எரிமலை அந்தமான்-நிக்கோபர் தீவுகளுள் ஒன்றான பேரன் தீவிலுள்ள எரிமலையே.
தொகு  

இதே மாதத்தில்

தொகு  

புவியியல் கண்டங்கள்

தொகு  

பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்

  • புவியியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|புவியியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • புவியியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • புவியியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • புவியியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

தொடர்பான தலைப்புகள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

Dieser Artikel basiert auf dem Artikel வலைவாசல்:புவியியல் aus der freien Enzyklopädie Wikipedia und steht unter der Doppellizenz GNU-Lizenz für freie Dokumentation und Creative Commons CC-BY-SA 3.0 Unported (Kurzfassung). In der Wikipedia ist eine Liste der Autoren verfügbar.