வலைவாசல்:விளையாட்டுக்கள்

வலைவாசல் விளையாட்டுக்கள்
.
தொகு 

அறிமுகம்

விளையாட்டுக்கள் (Game) என்பவை பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட செயற்பாடுகள் ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது. "ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.


தொகு 

சிறப்புக் கட்டுரை

தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பலவேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். தமிழர் விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானவை கிளித்தட்டு, மாட்டு வண்டிச் சவாரி, ஜல்லிக்கட்டு மற்றும் சிலம்பம் போன்றவையாகும்.தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

 • முப்பது செக்கன்களுக்குள் முடியும் விளையாட்டு சுமோ (படம்) ஆகும்.
 • சதுரங்க விளையாட்டின் தாயகம் இந்தியா ஆகும்.
 • கயிறு இழுத்தல் போட்டி முதன் முதல் சீனாவிலேயே ஆரம்பமானது.
 • உலகின் மிகப் பழமையான விளையாடு நீச்சல் ஆகும்.
 • மல்யுத்த சண்டையின் அதிகூடிய நேரம் 12 நிமிடங்கள் ஆகும்.
 • மனிதன் விளையாடிய முதல் விளையாட்டு வில்வித்தை ஆகும்.


தொகு 

முக்கிய செய்திகள்

தொகு 

பகுப்புக்கள்

தொகு 

விக்கித் திட்டங்கள்

தொகு 

சிறப்புப் படம்

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு

தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

 • விளையாட்டுக்கள் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • விளையாட்டுக்கள் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
 • விளையாட்டுக்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
 • விளையாட்டுக்கள் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
 • விளையாட்டுக்கள் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
 • விளையாட்டுக்கள் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

பிற விக்கிமீடியா திட்டங்கள்

Dieser Artikel basiert auf dem Artikel வலைவாசல்:விளையாட்டுக்கள் aus der freien Enzyklopädie Wikipedia und steht unter der Doppellizenz GNU-Lizenz für freie Dokumentation und Creative Commons CC-BY-SA 3.0 Unported (Kurzfassung). In der Wikipedia ist eine Liste der Autoren verfügbar.